Youth For a Shared Future
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12/12/2023) விருத்தி வலையமைப்பு மற்றும் கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் (ESDF) இன் நிதி அனுசரணையுடன் சமாதானத்தையும் இன நல்லிணக்கத்தையும் சமூக வலைத்தளங்களின் ஊடாக ஊக்குவித்தல் என்ற தொணிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் இளைஞர் சமாதான பரப்புரையாளர்கள் (YOUTH PEACE ADVOCATES) இனால் ஏறாவூரில் 3 மத ஸ்தலங்களுக்கும் விஜயம் செய்து ஒற்றுமை மற்றும் இனங்களுக்கு இடையிலான சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தற்போது எவ்வாறு உள்ளது? அதனை மேம்படுத்தக்கூடிய வழிகள் என்ன? நல்லிணக்கத்தை கட்டி எழுப்பதில் உள்ள சிக்கல்கள் என்ன? என்பது தொடர்பில் பொது மக்களிடமும், தங்கள் மதங்களில் வலியுறுத்தப்பட்ட சமாதானமாக வாழ்வதன் முக்கியத்துவம் தொடர்பாக மதத்தலைவர்களிடமும் எமது "YOUTH FOR A SHARED FUTURE" எனும் முகநூல் பக்கத்தில் இடுவதற்காக காணொளிகள் சேகரிக்கப்பட்டதுடன் எமது இளைஞர்களினால் தென்னை மரக்கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.



Good Work
ReplyDelete